
தற்போதுள்ள 8 அக்ரகாரம் உளுந்தாண்டார்கோவில் வீடு ஒரு லட்சிய வைராக்யத்துடன் கட்டப்பட்டது, உறவினர் வீட்டில் தங்கியிருந்து பேச்சுத் தகறhரு பெரும் சண்டையில் முடிய தனி வீடு போகவேண்டியதானது, போனால் சொந்த வீடுதான் என்று தீர்மானமானது, இந்த நிலையில் வீட்டுப் பெண்கள் தங்கள் அணிமணிகளை விற்க முன்வந்து எல்லாம் லட்சியவெறியில் நிறைவேறியது, செங்கல் செய்வதுமுதல் சுண்ணாம்பு பொடிப்பது வரை எல்லாம் துரித கதியில் இயங்கின, உத்திரத்திற்கு மரம் கூட ஆத்தூர் அருகிலிருந்து வந்தது, அந்த வீடு கல் மண் மரம் அல்ல, கௌரவம் கடின உழைப்பு தீர்மானம் ஆகியவற்றhல் ஆனது, அதன் மதிப்பு அரிதான மகத்துவமுடயது,