Saturday, January 26, 2008

உளுந்தாண்டார்கோவில் வீடு


தற்போதுள்ள 8 அக்ரகாரம் உளுந்தாண்டார்கோவில் வீடு ஒரு லட்சிய வைராக்யத்துடன் கட்டப்பட்டது, உறவினர் வீட்டில் தங்கியிருந்து பேச்சுத் தகறhரு பெரும் சண்டையில் முடிய தனி வீடு போகவேண்டியதானது, போனால் சொந்த வீடுதான் என்று தீர்மானமானது, இந்த நிலையில் வீட்டுப் பெண்கள் தங்கள் அணிமணிகளை விற்க முன்வந்து எல்லாம் லட்சியவெறியில் நிறைவேறியது, செங்கல் செய்வதுமுதல் சுண்ணாம்பு பொடிப்பது வரை எல்லாம் துரித கதியில் இயங்கின, உத்திரத்திற்கு மரம் கூட ஆத்தூர் அருகிலிருந்து வந்தது, அந்த வீடு கல் மண் மரம் அல்ல, கௌரவம் கடின உழைப்பு தீர்மானம் ஆகியவற்றhல் ஆனது, அதன் மதிப்பு அரிதான மகத்துவமுடயது,

கறார்

உளுந்தாண்டார்கோவில் ஊர்ப்பெரியவர்கள் வீட்டிலிருந்து நாலைந்துபேர் இரவு டியூஷன் படிப்பதற்காக வருவார்களாம், அப்படி வரும்போது அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து லாந்தர் விளக்கு (அதாவது மண்ணெண்ணெய் விளக்கு) எடுத்ததுவர வேண்டும், அதே சமயம் அந்த விளக்கை தன் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்,அவ்வளவு கறார் சின்னதாத்தா,

நேர்வழி

பெரியதாத்தா என்று நாங்கள் அழைக்கம் கிருஷ்ணசாமி தாத்தாவும் சின்ன தாத்தா என்றழைக்கும் சுப்பராமய்யர் தாத்தாவும் நிறைய இடர்கள் தாண்டி வந்தது எல்லோரும் எதிர்படும் இன்னல்கள்தான், ஆனால் கௌரவத்திற்கு பங்கம் இல்லாமலும் நேர்வழி பிசகாமலும் நடத்திய வாழ்க்கை முறை மிக போற்றுதலுக்குரியது,

Sunday, December 16, 2007

Krishnaswamy- Subbaraman & Agri

கிருஷ்ணசாமி சுப்பராமன் சகோதரர்கள் தங்களுடைய உடல் மன உழைப்புகளை பெரும்பாலும் விவசாய நிலத்திற்கு செலவிட்டனர், பெரும்பாலும் வீட்டு நகைகள் பொருட்கள் அடகுக் கடையில் வாசம் செய்யும், நிறைய கடன் உண்டு, அவற்றை மண்ணில் போட்டு தானியங்களை விளைத்தனர், களர் உவர் தன்மைய உடைய நிலத்தை நிறையபாடுபட்டு விளைக்க தக்கனவாய் செய்தனர்,அவர்களுக்கு மின்சார மோட்டார் போட்டு தண்ணீர் இறைத்து விவசாயம் செய்வதே கனவு, இடையில் தம்பியை இழந்த பெரியவர் பாடுபட்டு லோன் ஏற்பாடுகள் எல்லாம் செய்து மோட்டார் கைகூடி வரும்போது அவர் பாரிசவாயு தாக்கி இயக்கமற்றுப்போனார், பிறகு அவ்விருவருடைய பிள்ளைகள் அவற்றை நிறைவேற்றினர்,

Tuesday, November 13, 2007

Krishnaswamy Iyer

ஒரு முறை சிவராத்திரிக்கு பணத்தட்டுப்பாடு காரணமாக பெரிய தாத்தா செம்மனங்கூர் ரெட்டியிடம் கடன் கேட்கும் நிலை வந்து கேட்டதற்கு அவர் பண உதவி செய்யாமல் ஒரு உபதேசம் செய்தாராம்."ஸார் உங்களுக்குப் பண முழக்கம் பலவீனமான இந்நிலையில் ஏன் வேண் சிரமப் படுகிறீர். உங்களின் முதல் கால பூஜையை அதிகார பூர்வமாக எங்களுக்கு தாரா தத்தம் செய்து தாரும்" என்றாராம். தாத்தாவிற்கு கோபம் வந்தது. அதற்கு அவர் "ரொம்ப நன்றி. இன்னும் எனக்கு உடலில் வலுவும், மனதில் நம்பிக்கையும் இருக்கிறது. என் சிவனென்னை கைவிட மாட்டான். அவன் அருள் எப்படியோ அப்படி நடக்கும். குளம் நிறைய நீர், வீட்டில் பசும்பால், வயலில் இளநீர் இவற்றை வைத்து அபிஷேகம் செய்கிறேன். வேண்டாம் என்று சொல்லிடுவானோ என் சிவன் என்று மன உறுதியோடு வேறே ஏற்பாடு செய்து சிவராத்திரியை செவ்வனே செய்தவர்.அவரின் அசைக்க முடியாத பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டுதான் இந்நிகழ்ச்சி. இது போன்ற மற்றொரு நிகழ்ச்சி அடுத்த தொடரில்.
அக்கா.

Tuesday, October 30, 2007

பாலக்கொல்லை

பாலக்கொல்லை பெரியப்பா என்று எங்களால் அழைக்கப்படுபவர் வெங்கடகிருணஷ்ணய்யர், போஸ்ட்மாஸ்டர் பள்ளி ஆசிரியர் நிலச்சுவான்தார் என்ற பரிமாணங்கள் உண்டு, உள்கையில் பதிந்த வாட்ச் கையில் குடை தோல்செருப்பு நெற்றியில் விபூதி இதுதான் பாலக்கொல்லை பெரியப்பா, உளுந்தாண்டார்கோவிலில் நிலம் உண்டு ஆகையால் பெரும்பாலும் இங்கு வந்து போவார், தவறரமல் வீட்டுக்கு வந்து போவார், பேருந்து வசதிகள் வரும்வரை வண்டி கட்டிக்கொண்டுதான் வந்து போவார்கள், அறுவடை காலத்தில் இரண்டு நாட்கள் இருப்பார்கள், பிற்காலத்தில் பெரியம்மா கூட வந்துபோவார், நீண்ட நாட்கள் பாலக்கொல்லையில்தான் இருந்தார்கள், கடைசி காலத்தில் நெய்வேலிக்கு சென்று மகன்களுடன் தங்கியிருந்தார்கள்,
அவர்களுக்கு ஊமை சோதிடர் ஒருவர் மீது அதிக நம்பிக்கை உண்டு, அடிக்கடி ஊமை சோதிடன் சொன்னான் என்று சொல்வார்கள், அந்த சோதிடரும் அதிக வாஞ்சையுடன் அவர்கள் வீட்டிற்கு வந்துபோவதுண்டு,
குலதெய்வ வழிபாடான குருநாத சுவாமி பொங்கல் வைத்து வழிபடும் மிக நேமமமான பூசை நடந்தது இங்குதான் அதிகம் நான அறிந்தவரை,

Monday, October 29, 2007

Sathya feedback

ரமேஷ்,
பெரிய தாத்த மென்மையாக காணப்பட்டாலும் கண்டிப்பானவர்.ஆனால் யாரையும் பசியுடன் வேலைவாங்கமட்டார். வேலைக்காரனோடு சண்டை போட்டாலும் பசியறிந்து அன்னமிட்ட வர்.எந்த விஷயத்திலும் தம்பியின் ஆலோசனையை ஆதரிப்பவர்.அண்ணன், தம்பி உற்வுக்கு அவர்களெடுத்துக்காட்டானவர்கள். அந்த ஊரில் உயரிய சுபாவம் கொண்ட குடும்பத்தை உருவாக்கிக்கொண்ட து போற்றத்தக்கது. ஒரு முறை மழையை வேண்டி "கஜேந்திரமோக்ஷம்" படித்தார் பெ.தாத்தா. மழை பெய்த்தது. ஒரு முறை மகாபாரதம் படித்தார். காலப்போக்கில் மாஷபுரீஸ்வர ஸ்வாமி கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெயின்றி குருக்கள் வருந்தியபோது மெளனமாக இருந்து தினமும் அவர் போய் விளக்கு வைத்து வந்தார். Akka