கல்யாணசுந்தரம் - என் அப்பா - கணக்கர். அவர் மிக வேகமாக கூட்டுவார் (additions). லெட்ஜரில் 5 அல்லது 6 இலக்கத்தில் எண்கள் இருக்கும். அவர் மூன்றாவது இலக்கத்திலிருந்து கூட்ட ஆரம்பிப்பார். நாம் ஒன்றாவது இலக்கம் பிறகு பத்தாவது இலக்கம் பிறகு நூறாவது இலக்கம் என்று கூட்டுவோம். அவர் மூன்றாவது இலக்கத்திலிருந்தே ஆரம்பிப்பார்.
Sunday, January 17, 2010
கல்யாணசுந்தரமய்யர்- Handyman
கல்யாணசுந்தரமய்யர் - என் அப்பா -ஒரு Handyman. பொறியியல் - இஞ்சினீரிங் மூளை என்று சொல்வார்கள். படிப்பு ஒன்பதாவம் வகுப்பு வரை. டைபாயடு காய்ச்சலில் படிப்பு நின்றது.
அவருடைய கைஎழுத்து மிகப் பிரசித்தம். மிக அழகாக எழுதுவார். ஒருமுறை உறவினர் பெரியவர் ஒருவர் அவருடைய கையெழுத்தைப் பார்த்துவிட்டு எழுதிய தாளை எடுத்து பவ்யமாக கண்களில் ஒற்றிக்கொண்டாராம். ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துருக்கள் மணியின் அழகை ஒத்தவை. பெரிய பெரிய பெயர்ப்பலகைகளும் எழுதுவதில் வல்லவர். பிரம்பு குச்சியை கூறாக சீவி அவற்றை இங்கில் நனைத்து எழுதுவது அவருடைய பாணி.
- சைக்கிள் ரிப்பேர் நன்றாக செய்வார்/ பஞ்சர் ஓட்டுவது முதல் பிரீவீல் கட்டுவது வரை.
- தச்சு வேலை செய்வார் - எல்லா உபகரணமும் வைத்திருப்பார்/ உளி முதல் கொட்டபுளி வரை.
- தோல் பொருள்கள் தைப்பார். செருப்பூசி முதல் ரோசனம் வரை வைத்திருப்பார்.
- எலெக்ட்ரிக் வேலை செய்வார். ஒயர் வகைகள் டேப் டெஸ்ட்டர் வைத்திருப்பார்.
- விறகு பிளப்பதற்கான பலவகை உளி சம்மட்டி வைத்திருப்பார்.
- தோட்ட வேலைக்கான கடப்பாரை முதல் பில் செதுக்கி வரை வைத்திருப்பார்.
- எல்லா முதலுதவி மருந்தும் வைத்திருப்பார் - பஞ்சு முதல் டிங்ச்சர் வரை
- பாத்திரத்தில் பெயர் பொறிப்பார். அதற்கான சிற்றுளி சிறு சுத்தி வைத்திருப்பார்.
- பெயிண்ட் வேலை அனைத்தும் செய்வார்.
- சிறு சிறு மோட்டார் ரிப்பேர் செய்வார்
- பலவித பேனா வகைகள் சேகரித்து வைத்திருப்பார்
- கொலுத்து வேலைகள் செய்வார். வீட்டு தரை/ சுவர் அவர் செய்ததே
- இரும்பை நெகிழ்த்தும் சிறு வேலைகள் செய்வார்
- புக் பைண்டிங் செய்வார்
- வண்ணக் காகிதங்களை வெட்டி ஓட்டும் காலையில் தேர்ந்தவர்
- நூற்கும் தக்கிளி வேலை செய்வார்
- படங்கள் பிரேம் போடும் வேலை செய்வார். அதற்கான ஆணி சுத்தி உண்டு.
- பத்திரங்கள் அக்ரீமேண்டுகள் எழுதும் முறை தெரிந்தவர்
- முஸ்லீம்கள் சம்பிரதாயத்தில் நல்லவை கெட்டவற்றிற்கு கடிதம் எழுதும் வகை தெரிந்தவர்.
- ப்ளம்பிங் வேலைகள் தெரிந்தவர். பைப் ரெண்ச் மன்கி ஸ்பேனர் வைத்திருப்பார்.
- பித்தளை பாத்திரங்கள் ஓட்டை அடைக்கும் பூச்சு வேலை செய்வார். அதற்கான காரீயம் வெள்ளீயம் வைத்திருப்பார்.
- அலுமின்ய மற்றும் தாமிர பாத்திரங்கள் ஒடுக்கு எடுக்கும் வேலை தெரிந்தவர்.
- குடை ரிப்பேர் செய்வார். குடை துணி தைப்பார்.
- மேசன் வேலை தெரியும். பலகை மட்டம், குண்டு வைத்திருப்பார். நீர் மட்டம் பார்பார்.
- ஷீட் மெட்டல் எனப்படும் தகர வேலைகள் செய்வார். தகரத்தில் புனல். முறம் செய்துவைப்பார்.
என் நினைவில் இருப்பவை இவை.
அவருடைய 60 வயதிலும் அவர் கற்றுக்கொள்ள விரும்பியது - கடிகார ரிப்பேர் மற்றும் ரேடியோ ரிப்பேர்.
அவருடைய 60 வயதிலும் அவர் கற்றுக்கொள்ள விரும்பியது - கடிகார ரிப்பேர் மற்றும் ரேடியோ ரிப்பேர்.
மார்கண்டேய தாத்தா
மார்கண்டேய தாத்தா - என் அப்பாவின் தாத்தா - குறைப்ரசவத்தில் பிறந்தவர். அவருடைய தாயார் ருக்மிணி அம்மா. ஏழாவதோ எட்டாவதோ மாதத்தில் அவருக்கு தீவிர வயிற்றுக்கடுப்பு டிசென்ட்றி ஏற்பட்டது. அப்போது அடிக்கடி ஏற்பட்ட உபாதையில் வயிற்றின் அழுத்தத்தில் திடீரென குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை வாழை இலையில் விளக்கெண்ணை இட்டு மூடி - பஞ்சின் மூலம் நீரும் பாலும் ஊட்டி வளர்த்தனர்.
வீட்டு மாடி
Tuesday, January 12, 2010
தக்ஷினாமூர்த்தி சுவாமி
உளுந்தாண்டர் கோவில் - ஊர் மற்றும் கோவில் பெயர் அதுதான். கோவிலின் உட் பிரதட்சிணம் வரும்போது தக்ஷினாமூர்த்தி சுவாமி இருப்பார். பெரும்பாலும் இருட்டிலிருந்து பிரித்து அறியமுடியாத படியான குறைந்த வெளிச்சத்தில் இருப்பார் அவர். சிறுவர்களுக்கு தனியாக இரவில் வருவதென்பது சற்று பயமான விஷயம்தான். பெரும்பாலும் வௌவால்கள் நம்மை முந்திக்கொண்டு ஒரு ஓட்டம் ஓடும். பெரிய தாத்தா அவர் முன் உட்கார்ந்து அரை மணி நேரம் தியானம் செய்வாராம். பெரும்பாலும் என்னுடைய இரண்டாவது சகோதரி சத்யம் அக்கா உடன் இருப்பாளாம். இருட்டுக்கு பயந்து கொண்டு அவருடைய விரலை பிடித்தபடியே கோவில் சுற்றி வந்து அவர் அருகிலேயே உட்கார்ந்து கொள்வாளாம். தற்போது அத்வைத சித்தாந்தத்தில் ஊறிக்கொண்டிருக்கும் அவளுடைய ஞான வேட்கை தாத்தாவின் வழிகாட்டலில் அந்த ஞான குருவின் அருள் என்பதை அவள் பூரணமாக நம்புகிறாள். ஞான விதைகள் போட நேரம் காலம் வயது எதுவும் தேவையில்லை. தருணங்கள் போதும்.
Subscribe to:
Posts (Atom)



