Sunday, September 23, 2007

Chandru

At this point of time, I would like to thank my maternal uncle Chandru Mama -who is wioth his son in US now - without whose 'third eye' factor, I could not have given the photographs here. He was perhaps the only person those days who took photographs. He had the habit of photographing people and send them a copy of photograph. Thanks mama!

கல்யாணசுந்தரம் ஐயர்


திரு,கல்யாணசுந்தரம் அய்யர். என் தந்தையார், 1921-1992. அவரை நான் நானா என்று அழைப்பேன், இன்றளவும் நான் மிஸ் செய்தகொண்டிருக்கும் ஒரு ஆளுமை, அவரைப்பற்றி நான் சொல்லத்துவங்கினால் எனக்குள் நான் புதைந்துபோகக்கூடும், ஆகவே பிறகு பேசலாம், இந்த புகைப்படம் அவருடைய 40களில் எடுத்தது என்று நினைக்கிறேன், மனிதனை அவனுடைய மனிதத்தன்மையைத் தவிர வேறெதற்காகவும் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று நினைப்பவர், சுகத்தையும கஷ்டத்தையும் ஏறக்குறைய ஒரேமாதிரியான பாவனையுடன் ஏற்றவர், ஆன்மீகம் விஷயத்தில் அத்துப்படியான ஆள் இல்லை, ஆனால் ஆன்மீகம் சொல்லும் பக்குவத்தை அவர் எப்படியோ யதேச்சையாக பெற்றிருந்தார் நான் பார்த்தகாலங்களில்,

கிருஷ்ணசாமி அய்யர்



திரு,கிருஷ்ணசாமி ஐயர். என் நினைவில் சற்றே நிழல்தனமாக நினைவிருக்கிறது, அவரை நினைக்கும்போது வெண்மை எனக்கு ஞாபகமாகிறது, ஏன் எனத்தொpயவில்லை, ஒருவேளை அவரது நிறமாக இருக்கலாம், அவர் கட்டும் பஞ்சகச்ச வேட்டியாக இருக்கலாம், இட்டுக்கொள்ளும் விபூதியாக இருக்கலாம், வெற்றிலை போடாத பல்லாக இருக்கலாம், ஏன் என்று அறியேன்,
குள்ளமான உருவம், நல்ல எலுமிச்சை நிறம், விபதியணிந்த நெற்றி, வழுக்கைத்தலை, தினமும் காலை பூசை செய்வார், செம்பராங்கல் ஒன்றில் சந்தனக் கட்டையை தேய்த்து விழுதாக வரும் சந்தனத்தால் பூசை செய்வார், வெள்ளெருக்கு வேர் ஒன்று கிழக்குப்பக்கமாக இருந்த வேர் ஒன்றில் செய்த விநாயகர் மரச்சிலை ஒன்றுக்கு பூசை செய்வார், அதற்கென்று சிறிய துணி ஒன்றும் உண்டு, கந்தர் சஷ்டி கவசம் சொல்லிக்கொண்டே டகுடகு டிகுடிகு டங்குடிங்குகு என சந்தனம் அரைப்பார் என்று என் அம்மா சொல்லுவார், மனிதர்கள் மேல் மிகுந்த அன்பு உடையவர், மிகுந்த ஆன்மீகத்தன்மை உடையவர், மென்மையான மனப்பாங்குடையவர், சிக்கனமானவர், பள்ளிக்கூட ஆசிhpயர், வாத்யார் என்று பெயர், வீட்டுக்கே வாத்யார் விடுதான், இப்போதுகூட பலர் வாத்யார் வீட்டு அம்மா என்று என் அம்மாவை குறிப்பிடுகிறhhர்கள,

Saturday, September 8, 2007

காபி

சில நாட்கள் சகோதர தாத்தாக்கள் கடலுரில் ஓட்டல் வைத்து நடத்தி வ்நதார்கள், பின்பு அது லாபமற்றுப்போகவே நிறுத்திவிட்டார்கள், அதனால் எப்போதும் அவர்களுக்கு உணவு ருசி குறித்த ஈடுபாடும் சிக்கனமும் உண்டு, காபி போடுவதில் மீசைக்காரர் பேடன்ட வாங்குமளவு கெட்டிக்காரர், அவருடைய காபிக்காகவே காலைக் கூட்டம் அதிகமாயிருக்குமாம்,

காஞ்சி

சுந்தரேச அய்யர் காலத்தில் காஞ்சி பெரியவர் வரும் போது அவருக்கு பிட்சை இடும் கைங்கர்யம் செய்வது உண்டாம்,

Monday, September 3, 2007

உயிர்ப்பலி


மீசைக்காரர் என்று எல்லோராலும் அறியப்படும் என்னுடைய சின்ன தாத்தா சுப்பராமையர் முன்பு சொல்லியிருப்பது போல பேராளுமை உடையவர், அவருடைய நேர்மையும் மனிதநேயமும் கோபமும் பிரசித்தம், ஒருமுறை துர்க்கை கோவிலில் எல்லாரும் ஆடு மாடுகள் பலியிட வேண்டும் என்று சொன்னபோது அதை எதிர்த்தவர், ஊரின் பெரியவர்கள் அனைவருமே தயங்கிய நேரத்தில் அவர் உயிர்பலி வேண்டாம் என்று சொன்னதாகவும் அதனால் மாறுபட்ட கருத்துடன் அவரை எதிர்த்து பலி இடவேண்டும் இல்லாவிட்டால் அது வேறு யாரையாவது பலி வாங்கிவிடும் என்றும் சொல்ல உயிரைக் காக்கும் கடவுள் உயிரை வாங்குமா எனக்கேட்டு குளித்துவிட்டு ஈரத்துவாலையுடன் இடுப்பில் கட்டிய வேட்டியுடன் கோவிலை 108 சுற்று சுற்றி வந்து அமர்ந்து நீங்கள் கும்பிடப்போங்கள் பலி வாங்குவதாயிருந்தால் என்னை பலி வாங்கட்டும் என்று தீர்மானமாய் அமர்ந்ததாயும் பின்பு உயிர்ப்பலி இல்லாமல் வழிபாடு தொடர்ந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்,

கல் உரல்

முன்பு ஒருமுறை மார்க்கண்டேயர் காலத்தில் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்ததாகவும் அதனால் அவர் வேறு ஒரு ஊர் சென்று சிலகால்ம தங்கி இருந்ததாகவும் செய்தி, அப்படிஎரிந்த வீட்டில் வெடித்துச் சிதறிய கல் உரல் ஒன்று இப்போதும உளுந்தாண்டார்கோவில் வீட்டின் பின் தோட்டத்தில் இருக்கிறது,