Tuesday, October 30, 2007

பாலக்கொல்லை

பாலக்கொல்லை பெரியப்பா என்று எங்களால் அழைக்கப்படுபவர் வெங்கடகிருணஷ்ணய்யர், போஸ்ட்மாஸ்டர் பள்ளி ஆசிரியர் நிலச்சுவான்தார் என்ற பரிமாணங்கள் உண்டு, உள்கையில் பதிந்த வாட்ச் கையில் குடை தோல்செருப்பு நெற்றியில் விபூதி இதுதான் பாலக்கொல்லை பெரியப்பா, உளுந்தாண்டார்கோவிலில் நிலம் உண்டு ஆகையால் பெரும்பாலும் இங்கு வந்து போவார், தவறரமல் வீட்டுக்கு வந்து போவார், பேருந்து வசதிகள் வரும்வரை வண்டி கட்டிக்கொண்டுதான் வந்து போவார்கள், அறுவடை காலத்தில் இரண்டு நாட்கள் இருப்பார்கள், பிற்காலத்தில் பெரியம்மா கூட வந்துபோவார், நீண்ட நாட்கள் பாலக்கொல்லையில்தான் இருந்தார்கள், கடைசி காலத்தில் நெய்வேலிக்கு சென்று மகன்களுடன் தங்கியிருந்தார்கள்,
அவர்களுக்கு ஊமை சோதிடர் ஒருவர் மீது அதிக நம்பிக்கை உண்டு, அடிக்கடி ஊமை சோதிடன் சொன்னான் என்று சொல்வார்கள், அந்த சோதிடரும் அதிக வாஞ்சையுடன் அவர்கள் வீட்டிற்கு வந்துபோவதுண்டு,
குலதெய்வ வழிபாடான குருநாத சுவாமி பொங்கல் வைத்து வழிபடும் மிக நேமமமான பூசை நடந்தது இங்குதான் அதிகம் நான அறிந்தவரை,

Monday, October 29, 2007

Sathya feedback

ரமேஷ்,
பெரிய தாத்த மென்மையாக காணப்பட்டாலும் கண்டிப்பானவர்.ஆனால் யாரையும் பசியுடன் வேலைவாங்கமட்டார். வேலைக்காரனோடு சண்டை போட்டாலும் பசியறிந்து அன்னமிட்ட வர்.எந்த விஷயத்திலும் தம்பியின் ஆலோசனையை ஆதரிப்பவர்.அண்ணன், தம்பி உற்வுக்கு அவர்களெடுத்துக்காட்டானவர்கள். அந்த ஊரில் உயரிய சுபாவம் கொண்ட குடும்பத்தை உருவாக்கிக்கொண்ட து போற்றத்தக்கது. ஒரு முறை மழையை வேண்டி "கஜேந்திரமோக்ஷம்" படித்தார் பெ.தாத்தா. மழை பெய்த்தது. ஒரு முறை மகாபாரதம் படித்தார். காலப்போக்கில் மாஷபுரீஸ்வர ஸ்வாமி கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெயின்றி குருக்கள் வருந்தியபோது மெளனமாக இருந்து தினமும் அவர் போய் விளக்கு வைத்து வந்தார். Akka

Sathya feedback

ரமேஷ்
நம் தாத்தாக்கள் இருவரும் குடும்பத்தை போஷிக்க வேண்டி காடாக இருந்த நிலத்தை வயலாகமாற்றிகூலி ஆட்கள் இன்றி தாங்களே சொந்தமாக செய்து, செலவுக்கு பாட்டிகளின் சகாயத்தோடு, பயிரிட்டனர். நீர் பாய்ச்ச அப்பாவும் ஆத்தூர் சித்தப்பவும் ஏற்றம் இறைத்தனர். தாயாதியின் வீட்டிலிருந்து சொந்த வீட்டைக் கட்டி வர குடும்பத்தினர் எல்லோரும் சிரமித்தனர். நம் வீட்டின் ஒவ்வொரு தூலத்திலும் பாட்டிகளின் நகைகள் காணப்படும். வீட்டு சுவருக்கு பூச்சு பூச அப்பா கொத்தனார் ஆனார். அத்தைகள் மண் சுமந்தனர். இப்படி நம் வீடு செங்கல், மண்ல், சுண்ணாம்பு மட்டுமன்றி அன்பு, பாசம், ப்ந்தம், அரவணைப்பு, ஒத்துழைப்பு இவற்றால் கட்டப்பட்ட "அன்பு மாளிகை" நம் வீடு. நாம் அதை விற்றாலும் நம் மனதில் பதிந்தது மற்றாருக்கு உரிமை ஆகாது.
Sathyam Akka

அக்கா

பெனுபர்த்தி ப்ளாக் நீ செய்து வருவது மிகவும் போற்றத்தக்கது. உனக்கு உள்ள ஓய்வு நேரத்தில் உபயோகமான வேலை செய்து வருவது வரவேற்கவேண்டிய அம்சம்.
கிருஷ்ணஸ்வாமி அய்யர்:- இவரைப் பற்றி புரிந்துகொள்ள நம் மூளை வியர்த்துவிடும்.லெளகிக வாழ்க்கையைப் பற்றி சொல்லப் போனால் கெளரவமாக குடும்பத்தை நடத்தினார்.அதில் ஏற்ற்த் தாழ்வுகள் சகஜம். ஆனால் ஆன்மீகமாக சுயமாகவே அவர் நல் வழி வகுத்துக்கொண்டவர்.கீதையில் சொன்னபடி அனைவரிடத்திலும் பாசமாகவும் அதே சமயம்அளவுக்கு மீறாமலும் இருந்த விதம் இப்போது புரிகிறது
அக்கா

Sunday, October 7, 2007

கிருஷ்ணசாமி தாத்தா



டைரிக் குறிப்புகள் சில் கறhராகவும் உள்ளன, உதாரணம் - சாலி நெல் நாம் எடுத்துக் கொண்டது கணக்கு தீர்த்து கொடுத்தது 1 1/4 முட்டைக்கு at 35 வீதம் 44.,00 இனி அவளது நெல் நம்மிடம் இல்லை

கிருஷ்ணசாமி தாத்தா

தாத்தா டியூஷன் சொல்லிக்கொடுத்து வந்தார், உள்ளுர் மாணவர்கள் வீட்டிற்கே வருவார்கள், வெளியூர் என்றhல் இவர் போய் இருக்கலாம், கிரிஜh டியூஷன் வரவு 11.40. சாலிக்கு கொடுத்தது 15.00 (சாலி என்பவர் சாலி பாட்டி, என் தாத்தாவின் தங்கை)

கிருஷ்ணசாமி அய்யர்

வரவு செலவு எதுவாயினும் எழுதப்பட்டிருக்கிறது, மகனோ தம்பியோ பிறரோ யாராயினும் சரி எழுதப்பட்டள்ளது, இதில் கல்யாணம் வரவு ருபா 1.00.விருத்தாசலம் போய்வர செலவு 1.1,0 பென்ஷன் 31.12.63 வரை இன்று வரவு 24.36 பொங்கல் பானை 0.65 நயாபைசா,,கடைசியில் பேலன்ஸ் 43.00 என்று எழுதியிருக்கிறhர், 8 ஜனவரி 1964

கிருஷ்ணசாமி அய்யர்


கிருஷ்ணசாமி தாத்தா வின் கையெழுத்து அவருடைய டயரியில் இருந்து, ராசுh என்று அவர் குறிப்பிடுவது தன் தம்பி (அதாவது மீசைக்கார தாத்தாவை), தம்பி மீது மிகுந்த அன்புடையவர், ஒரே வரியில் சொல்ல முடியும் என்றhல் எவ்வளவோ பொருளாதார நெருக்கடி வந்தபோதும் அதை இருவரும் சேர்ந்து சந்தித்து சமாளித்தனர் தங்கள் கடைசீ நொடிவரை, கணக்கு வழக்கு விஷயத்தில் கறhராக பேசிக்கொண்டாலும் அவர்கள் பாசமுடைய சகோதரர்கள், இவருடைய டயரி முழுவதுமே வரவு செலவு விஷயங்களாகவே இருக்கிறது,

கிருஷ்ணசாமி


இது என் நேர் தாத்தா கிருஷ்ணசாமி அய்யரின் நாட்குறிப்பு, எனக்கு கிடைத்தது, 1964 ஆம் வருட டயரி, நான் பிறப்பதற்கு முன் எழுதப்பட்டது, சந்திரா பப்ளிகேஷன்ஸ் 26 புதுமண்டபம் மதுரை-1, டீலக்்ஸ் டைரி,